ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் 10 ஆயிரத்து 652 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, மார்ச் 26-ம் தேதி முதல் மே 7-ம் தேதி வரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 732 வழக்குகளில், 341 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 215 வழக்குகளில் 105 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 109 வழக்குகளில், 10 ஆயிரத்து 206 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு தொடங்கிய நிலையில், சில வழக்குகள் நீதிமன்ற அறைகளில் விசாரிக்கப்பட்டாலும், ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் அனைத்து வழக்குகளும் வீடியோ கான்பரன்சிங் மூலம் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.