Advertisment

தனுஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள உயர் நீதிமன்ற கிளை..! 

High Court branch sends notice to Dhanush ..!

தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்திற்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

தனுஷ், மாரிசெல்வராஜ் கூட்டணியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்தின் ‘பண்டாரத்தி புராணம்’ எனும் பாடல் கடந்த 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேவேளையில் இந்த பாடலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிப்பிடும் பெயர் பயன்படுத்தியுள்ளதாகவும், அதனால், அந்த பாடலை நீக்க வேண்டும் என்றும் அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் புல்லட் பிரபு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே இயக்குநர் மாரிசெல்வராஜ், திரைப்படத் தணிக்கைத் துறை மண்டல அலுவலர், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபிருந்தது. இந்நிலையில் இன்று தனுஷ் மற்றும் அந்த பாடலை பாடிய தேவாவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

MADURAI COURT DHANUSH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe