Skip to main content

7.5% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

High Court adjourns judgment on cases against 7.5% reservation!

 

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 

 

ஏற்கனவே, தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அமலில் இருப்பதால், மீதமுள்ள 31% இடங்களில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதால், பொதுப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொத்த இடங்களில் தான் 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்தது. 

 

நீட் அடிப்படையிலேயே 7.5% ஒதுக்கீடு வழங்கப்படுவதால், தகுதியான பொதுப் பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், விளக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. 

 

சார்ந்த செய்திகள்