Skip to main content

தந்தை மகன் உயிரிழப்பு விவகாரம்!! உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
ு

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் அழைத்து சென்றதாகக் கூறப்படுகின்றது.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து தந்தை, மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கி ரத்தப்போக்கு ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவ சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், கோவில்பட்டி கிளை சிறையில் இருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழக்க, அவரது தந்தையான ஜெயராஜ் அதிகாலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூறாய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உடற்கூறாய்வை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தன் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்த காரணத்திற்காக சிறுவனை கொன்ற தாய்!

Published on 04/09/2022 | Edited on 04/09/2022

 

ரதக

 

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து சிறுவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.


காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வருகிறார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்துவந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. இதனால் தன்னுடைய மகள்  சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் தற்போது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

Next Story

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூசாரி... சோகத்தில் கிராமத்தினர்!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

3

 

தமிழகம் முழுவதும் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்து கனமழை பொழிந்து வருகிறது. பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடும் அளவுக்கு மழையின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. 

 

திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள பாலங்களில் காட்டாற்று நீர் கரைபுரண்டு ஓடுகிறது. துறையூர் அருகே சேனப்ப நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் பூசாரி அரிராஜ் (40). கோவில் நடையைச் சாற்றி விட்டு வீடு திரும்பிய போது ஆற்றைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டாற்று வெள்ளம் அவரை இழுத்துச் சென்றுள்ளது. துறையூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை மீட்புக்குழுவினர் அரிராஜை தேடிய பொழுது இறந்த நிலையில் இருந்த அவரது உடலைச் சடலமாக மீட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.