50 சதவீத பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம் செயல்படும் - தலைமை பதிவாளர் உத்தரவு!  

 High Court to act with 50 per cent staff-Chief Registrar Order!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி தமிழ்நாடுஅரசு கோரிக்கை வைத்திருந்தது. அதனை ஏற்று, நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக்குறைக்கும் நோக்குடன், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொளி மூலமாக விசாரணை நடைபெற்றுவருகிறது. வழக்கறிஞர் அறைகள்,சங்க அலுவலகங்கள், நூலகங்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வந்து விசாரித்துவருகின்றனர். அரசு வழக்கறிஞர்கள் சிலர் நேரில் ஆஜராகிவருகின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், ஜூன் 14ஆம் தேதிமுதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,அனைத்து பிரிவுகளும் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் எனஉயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் ப. தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும், மற்றவர்கள் பணிக்கு வர தயாராக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பிக்கும் வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடுஅரசு அவ்வப்போது பிறப்பிக்கும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் தலைமை பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

corona virus highcourt
இதையும் படியுங்கள்
Subscribe