Advertisment

ஒரு கட்சியின் வேட்பாளர் கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிடுவது மோசடி! ஐகோர்ட் அதிரடி!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்ராஜ், ம.தி.மு.க.வின் கணேசமூர்த்தி மற்றும் ஐ.ஜே.கே கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

ஹ்

தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது. இது குறித்து தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதித்தது தேர்தல் நடைமுறைகளை மோசடி செய்வது ஆகாதா? என கேள்வி எழுப்பினர். மேலும், தேர்தலில் கட்சியின் பெயர், தேர்தல் அறிக்கையை விட, சின்னமே பெரும்பங்காற்றுகிறது. சின்னத்தை வைத்து தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். தேர்தலில் வெற்றி, தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என்று தெரிவித்தனர்.

Advertisment

உடனே, ஒரு கட்சியை சேர்ந்தவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என விதி இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அடுத்த மாதம் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe