சென்னையில் MGR நூற்றாண்டு விழா: விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

mgr

சென்னை நந்தனத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக ஆளும் அதிமுக சார்பாக சென்னையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் உத்தரவிட்டனர். மேலும் பேனர்கள் அகற்றப்பட்டது குறித்து அக்டோர் 3ஆம் தேதி தமிழக அரசு அறிக்கை தர வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை சென்னை நந்தனத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

high court
இதையும் படியுங்கள்
Subscribe