Hi-tech thief who asked for five rupees and raised sixty thousand!

Advertisment

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (21). பட்டதாரியான இவர், தற்போது வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி இருப்பதாக அறிந்த அவர், டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தொலைபேசியில் நேர்முகத் தேர்வை சந்தித்துள்ளார். பின்னர் துபாய் செல்வதற்கான விசா பெறுவதற்கு தன்னுடைய கடவுச்சீட்டை கொரியர் மூலம் அந்நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய தந்தை சுப்பிரமணியனுக்கு செல்போன் மூலம் வந்த அழைப்பில் பல்வேறு தகவல்கள் கேட்டு பெற்றுக் கொண்ட அந்த நிறுனத்தில் பேசுவதாக சொன்ன மர்ம நபர், அவரிடமிருந்து ரூ.5 மட்டும் வங்கி கணக்கிலிருந்து செலுத்துமாறு கேட்டுள்ளார். சுப்பிரமணியனும் அவர்கள் கேட்ட ரூ.5 அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அதன்பின் 68 ஆயிரத்து 300 ரூபாயை மர்ம நபர்கள் ஸ்ரீதரின் வங்கிக் கணக்கில் இருந்து திருடி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீதர், சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.