Advertisment

செட்டிநாடு குழுமத்தில் வருமான வரி சோதனை!

hettinad group income tax raid

Advertisment

செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை, காஞ்சிபுரம், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை இன்று (09/12/2020) காலை 08.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. சோதனையில் சுமார் 100- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செட்டிநாடு குழுமமானது சிமெண்ட் உற்பத்தி, மின் உற்பத்தி, போக்குவரத்து, கல்வி நிலையங்கள், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Chettinad income tax raid
இதையும் படியுங்கள்
Subscribe