Advertisment

விசாரிக்க சென்ற இடத்தில் தள்ளாட்டம்; போதை போலீஸ் சஸ்பெண்ட்

 Hesitation at the place of inquiry; Drug police suspended

கரூரில் பணி நேரத்தில் முழு போதையில் விசாரிக்க சென்ற போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கரூரில் சாலை ஓரத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீசார் இருவர் அங்கிருந்த பொதுமக்களிடம் போதையில் ஆபாசமான முறையில் பேசும் வீடியோ காட்சி ஒன்று வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

Advertisment

விசாரணையில் கரூர் நகர காவல் நிலைய தலைமைக் காவலர் யுவராஜ் மற்றும் முதல் நிலை காவலர் கோபி ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்றுபோதை ஆசாமி ஒருவர் நெடுஞ்சாலை அருகே உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலைய தலைமைக் காவலர் யுவராஜ் மற்றும் முதல் நிலை காவலர் கோபி ஆகியோர் விசாரிக்க சென்றுள்ளனர். அப்பொழுது பணி நேரத்திலேயே மது மயக்கத்தில் இருந்த இருவரும், அங்கிருந்த மக்களிடம் ஆபாசமாக பேசியது காணொளி மூலம் தெரிந்த நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

incident karur police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe