டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இருசக்கர நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் பிரிவுகளில் ஒன்று. அதன் வழியில் அந்நிறுவனத்தின் புதிய மாடலான Maestro Edge 125-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக இந்தியாவின் முதல் ஃபியூயல் இன்ஜெக்ஷன் (Fuel injection) ஸ்கூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mastro.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டிரம் பிரேக், டிஸ்க் பிரேக், ஃபியூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பங்களுடன் 3 மாடல்களில் இந்த வாகனம் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இதன் விலை ரூ.58,500 இருந்து தொடங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரம் பிரேக் கொண்ட வாகனத்தின் விலை ரூ.58,500, டிஸ்க் பிரேக் கொண்ட வாகனத்தின் விலை ரூ.60,000 மற்றும் ஃபியூயல் இன்ஜெக்ஷன் கொண்ட வாகனத்தின் விலை ரூ.62,700 என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Destini 125 ஸ்கூட்டரில் உள்ளது போலவே புதிய Maestro Edge 125யிலும் 125சிசி ஏர்-கூல்டு இஞ்சின் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இது கார்பரேட்டட் மற்றும் ஃபியூயல் இன்ஜெக்ஷன் என இரண்டு இஞ்சின்களிலும் கிடைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)