Advertisment

''இங்க விஜய் சிஎம் ஆனால்தான் அங்கு ராகுல் பிஎம் ஆவார்''-தவெக பெண் நிர்வாகி பேச்சு  

வக்புவாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஒன்றிணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

சென்னை பனையூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். அதேபோல பல இடங்களிலும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் போராட்ட மேடையில் பேசிய பெண் ஒருவர், ''வாட் மோடிஜி இட் இஸ் வெரி ராங் மோடிஜி; வாட் அமித்ஷாஜி இட் இஸ் டூ மச் ராங் அமித்ஷாஜி. ஏதேதோ உட்காந்து கொண்டு வேலை வெட்டி இல்லாமல் ஏதோ சட்டங்களை நிறைவேற்றி நம்ம உசுர வாங்க வேண்டியது. இப்படித்தான் இவர்கள் ஆட்சி நடக்கிறது. இன்னும் கொஞ்சநாள் தான் இன்னும் இரண்டு வருஷத்துல பாஜக ஆட்சி ஆட்டமேட்டிக்கா கவிழ்ந்து விடும். இரண்டு வருடத்தில் மோடி அவுட். வீட்டுக்கு போய் விடுவார். பாவம் ஒரு மனுஷன் ராகுல் காந்தி திரி திரி என்று திரிந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு தமிழ்நாட்டில் இருப்பவர்களே ஆப்பு வைக்கிறார்கள். நம்ம விஜய் வந்தால் தான் அவரை பிஎம் ஆக்க முடியும். தமிழ்நாட்டில் விஜய் முதலமைச்சரானால் தான் அங்கு ராகுல்காந்தி பிரதமராவார். இதை எழுதி வச்சுக்கோங்க'' எனப் பேசினார்.

Advertisment
congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe