Advertisment

மூலிகை சூப் வழங்கும் காங்கிரஸ் தலைவர்!

கரோனாவைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், தன்னார்வலர்கள் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Advertisment

Herbal soup

அப்படி ஈடுபட்டுவரும் அவர்களுக்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தனது உணர்வுகள் என்ற அமைப்பின் மூலமாக, ஒவ்வொரு நாளும் புதிதாக காய்ச்சப்பட்ட மூலிகை சூப் நீரை போலீசார்,தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நேரில் சென்று வழங்கிவருகிறார்.

இந்த மூலிகை சூப் பல்வேறு சித்த மருந்துகளால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் களத்தில் பணியாற்றுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காகதான் தொடர்ந்து இந்த பணியை செய்து வருகிறோம் என கூறுகிறார் மக்கள் ராஜன். ஒவ்வொரு நாளும் சுமார் 1000 பேருக்கு மேல் இந்த மூலிகை சூப் நீரை கொடுத்து வருகின்றனர்,இந்த அமைப்பினர்.

SOUP herbal Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe