ADVERTISEMENT

வெட்டி வேரில் மூலிகை மாஸ்க்... ஈரோட்டில் புதுமை!

08:31 PM Jul 10, 2020 | kalaimohan

ADVERTISEMENT

மாஸ்க் போடாத மனிதர்களை இனி பார்க்க முடியாது என்ற நிலையை கொண்டு வந்து விட்டது கொடுங்கோல் கரோனா வைரஸ். அப்படிப்பட்ட அந்த மாஸ்க்குகளிலும் புதுமைகளான வரவுகள் வந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக மிகவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதார துறையும் இணைந்து பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது குறிப்பாக முகத்தில் மாஸ்க் அணியாமல் வரும் நபர்கள் மீது காவல்துறை மற்றும் சுகாதார துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. கரோனா பீதியாலும், அபராதம் கட்ட வேண்டும் என்ற பயத்தாலும் பொது மக்கள் பெரும்பாலும் மாஸ்க் அணிந்து வருகின்றனர். இந்த மாஸ்க் வகைகளில் மூன்று லேயர் கொண்ட மாஸ்க், அடுத்து என் 95 மாஸ்க் மேலும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மாஸ்க் அதேபோல் சாதாரண துணிகளில் உருவாக்கப்படும் மாஸ்க் வகைகள் என எல்லாமே விற்பனைக்கு உள்ளது. இந்த நிலையில் மூலிகை மாஸ்க் தயாரிப்பும் அதன் விற்பனையும் ஈரோட்டில் நடந்து வருகிறது.


இது சம்பந்தமாக மூலிகை மாஸ்க் உருவாக்கும் பெண் ஒருவர் கூறுகையில், "இந்த வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் எல்லா ஊர்களிலும் பல வகையான மாஸ்க் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல மாஸ்க்குகளில் சுவாசக்கோளாறு, வயதானவர்கள் மாஸ்க் அணிவிப்பதில் சிரமம் ஏற்படுவதை நாங்கள் கருத்தில் கொண்டு புதுமையாக வெட்டிவேர் நிரப்பி, மூலிகை மாஸ்க்காக இதை தயாரிக்கிறோம். இந்த மாஸ்க்குகள் மூன்று நாட்கள் வரை பயன்படுத்திய பிறகு, உள்ளே உள்ள வெட்டிவேரை நீக்கிவிட்டு மாஸ்க்கை தண்ணீரில் அலசிக் காயவைக்க வேண்டும் பிறகு புதிய வெட்டிவேரை உள்ளே இணைத்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது மாஸ்க்கை துவைத்து காயவைத்து, மீண்டும் வெட்டிவேரைப் போட்டு பயன்படுத்தலாம். ஒரு வெட்டிவேர் மாஸ்க்கின் விலை ரூபாய் 75. இது உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. முதியவர்கள், சுவாசக்கோளாறு உள்ளவர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் இதை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்," என்றார்.

வெட்டி வேரு வாசம்... இனி மக்கள் முகங்களில் நேசம்...

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT