Advertisment

14 வயது சிறுமி கர்ப்பம்; தந்தை போக்சோவில் கைது

Her father was arrested in Pocso due to daughter pregnant

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த 42 வயதான தொழிலாளி ஒருவர், அந்தப் பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு தற்போது 14 வயது ஆகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன் அவரது மனைவி இறந்துவிட்டார். ஏற்கெனவே குடிப்பழக்கம் உள்ள தொழிலாளி, மனைவி இறந்த பின்னர் மேலும் அதிகளவில் குடிக்கு அடிமையானதாகத்தெரிகிறது. குடித்துவிட்டு வந்து தனது மகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளார்.

Advertisment

இதன் காரணமாகச் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அந்த நிலையிலும் மகளுக்குப் பாலியல் தொல்லை தருவதை நிறுத்தாத அந்த குடிகாரத் தந்தை, கடந்த ஜனவரி மாதம் மகளுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதும் வீட்டை விட்டு மாயமானார். சிறுமியின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்தனர். பிரசவத்திற்குப் பின் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது தந்தை மீது சிறுமி பாலியல் புகார் அளித்தார்.

Advertisment

அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லால்குடி மகளிர் காவல் நிலைய போலீஸார், கடந்த ஏழு மாதமாக மாயமான தந்தையைத்தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை லால்குடி பேருந்து நிலையம் பகுதியில் நின்றிருந்த தந்தையைப் பிடித்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரை போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

father arrested POCSO trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe