Skip to main content

குவைத் தீ விபத்து ; தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Helpline numbers announced by the TN govt for kuwait city fire incident 

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று (12.06.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள  செய்திக்குறிப்பில், “குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில், இன்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 49 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வரப்பெற்றுள்ளது. அவர்களுள் எவரேனும் தமிழர் உள்ளனரா என்ற தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் குவைத் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Helpline numbers announced by the TN govt for kuwait city fire incident 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த தீ விபத்தில் தமிழர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்தம் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“உலக அளவில் முதல்வரின் காலை உணவுத்  திட்டம் பாராட்டப்பட்டு வருகிறது” - அமைச்சர் ஐ.பெரியசாமி  

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
breakfast program is being appreciated globally says Minister I. Periyasamy

தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும்,  முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் வரும் கல்வியாண்டு முதல் 30,122  பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை  பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு இன்று வரை  சிறப்பாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் 17 லட்சம்  மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள். 

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளும்  இந்த திட்டத்தை தங்கள் பள்ளிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக  முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக முதல்வர்  பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் அன்று அரசு உதவி பெறும்  தனியார் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை தொடங்க திட்டமிட்டு திருவள்ளுவர்  மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரியில் உள்ள அரசு உதவி  பெறும் தனியார் பள்ளியான புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை  தொடங்கி வைத்தார்.   

breakfast program is being appreciated globally says Minister I. Periyasamy

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள  அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.  இதன்மூலம் 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2,23,536 மாணவ- மாணவியர்கள் பயன் பெறுகிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட  ஊராட்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒன்றிய பெருந்தலைவர்  மகேஸ்வரிமுருகேசன், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், பாறைப்பட்டி  ராமன், காந்திகிராமம் அறக்கட்;டளை செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத்தலைவர் தங்கமுனியம்மாள்  வரவேற்றார். நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மலர்  தூவி அஞ்சலி செலுத்தினார். 

அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டியை  அமைச்சர் ஐ.பெரியசாமி பரிமாறினார். அதன்பிறகு பேசிய அவர், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது  தமிழகத்தில் யாரும் வெறும் வயிற்றுடன் படுக்க கூடாது என்ற நல்ல  எண்ணத்தில் ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்ற திட்டத்தை அறிவித்து  அதன்மூலம் தமிழக மக்களின் வயிற்று பசியை போக்கினார். அவருடைய வழியில் வந்த  தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெறும் வயிற்றுடன் கல்வியை கற்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கி காலை  சிற்றுண்டி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதோடும் இன்று அரசு உதவி  பெறும் தனியார் பள்ளிகளிலும் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். 

breakfast program is being appreciated globally says Minister I. Periyasamy

உலக  அளவில் இந்தத் திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவர்கள் வயிற்றுப்பசி இல்லாமல்  நன்றாக படிக்கும் நிலைமை உருவாகி உயர்க்கல்வி கற்கும் அளவிற்கு மாணவர்கள் கல்வித்தரம் உயரும் என்றார். தமிழகத்தில் அனைவரின் நலன்  காக்கும் முதல்வராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். தேர்தல் நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  கொடுத்த வாக்குறுதிகள்  அனைத்தையும் நிறைவேற்றி வருவதோடு கடைக்கோடி மக்கள் வரை திட்டம்  செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என்று கூறினார். அதன்பின் விழாவில் காந்திகிராமம் ஊராட்சியைச் சேர்ந்த 16 பேருக்கு  கலைஞரின் கனவு இல்லத்திட்டம் மூலம் வீடுகள் கட்டுவதற்கான ஆணையையும், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டம் மூலம் 5 பேருக்கு ஆணையையும் வழங்கினார்.

Next Story

‘தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேறு..’ - காவிரி விவகாரத்தில் அமைச்சர் பதில்

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
duraimurugan said Karnataka on Cauvery will be taken in consultation with cm stalin

வேலூரில் ஊரகப் பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில் உள்ள நிதியுதவி தொடக்கப்பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். இதில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 68 ஊரக அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 1-5-ம் வகுப்புகளில் பயிலும் 1296-மாணவர்கள், 1244-மாணவிகள் மொத்தம் 2540 மாணவ மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், “தமிழகத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்பட்டாலும் அத்தியாவசிய தேவைக்காக ஒரு டிஎம்சி நீரை தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு டிஎம்சி யை கூட தர மாட்டேன் என அடம்பிடித்தார்கள். நாங்கள் நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினோம். அதன் பிறகும் அந்தப் போக்கில் இருந்து கர்நாடக அரசு மாறாமல் ஒரு டிஎம்சி வழங்க முடியாது என மறுத்துவிட்டு 8 ஆயிரம் கன அடி தருகிறோம் எனச் சொல்கிறார்கள்.

ஒரு டிஎம்சி என்பது 11 ஆயிரத்தி 574 கனஅடி ஆகும். கர்நாடகாவில் தண்ணீர் இருக்கிறது. கே.ஆர்.எஸ் ஆணையில் 105 ஆடி தண்ணீர் உள்ளது. கபினியில் 64 அடி தண்ணீர் உள்ளது. இது போன்று நமக்கு தண்ணீர் தரும் கர்நாடகாவில் உள்ள 4 அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. இதுவரை(15.07.2024)  4,047 கன அடி தான் மேட்டூருக்கு தண்ணீர் வந்துள்ளது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால் அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழகம் அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும். இதில் கர்நாடக மேல்முறையீடு செய்தால் ரொம்ப நல்லது. அது நமக்கு தான் கை கொடுக்கும். மேலும் கர்நாடகா தண்ணீர் கொடுக்கிறோம் என சொன்னாலும், கொடுக்க மாட்டேன் என்று சொன்னாலும் மழை அதிகமாக பெய்தால் தண்ணீர் வந்து தான் ஆகணும்” என்றார்.

இதையடுத்து, கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின் காவேரி விவகாரத்தில் தமிழக மக்களையும் தமிழக விவசாயிகளையும் பற்றி கவலைப்படாமல் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு, “ எடப்பாடி பழனிசாமிக்கு காவேரி விவகாரம் குறித்து அதிகமாக தெரியாது. அவர்கள் ஆட்சியில் மட்டும் கேட்ட உடனேயே தண்ணீர் வந்து விட்டதா?  கூட்டணி என்பது வேறு, அவர்களின் பிரச்சனை வேறு. தாயாக இருந்தாலும் பிள்ளையாக இருந்தாலும் வயிறு வேறு கர்நாடகாவிற்கு உள்ள உரிமையை அவர்கள் கேட்கிறார்கள். தமிழகத்திற்கு உள்ள உரிமையை நாம் கேட்கிறோம். நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும். இறுதி முடிவு உச்ச நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது. நான் மிக நீண்ட காலமாக காவேரி விவகாரத்தை கையாண்டு வருகிறேன் இதில் உள்ள எல்லா பிரச்சனை குறித்தும் எனக்கு தெரியும்” என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தது குறித்து கேட்டதற்கு, “இன்வெஸ்டிகேஷனில் உள்ளது” என்றார்.

முன்னதாக அவர் பேசுகையில், “காமராஜர் படிக்காதவராக இருந்தாலும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கொடுத்ததால் அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்த கலைஞர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தில் இரண்டு முட்டைகளை போட்டு சத்துணவாக மாற்றினார். அன்றைக்கு காமராஜர் பிள்ளைகள் படிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அன்றைக்கு காமராஜருக்கு ஏற்பட்ட ஞானோதயம் போல் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்டு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்தார்.