Skip to main content

உதவும் உள்ளங்களின் 'ஆனந்த தீபாவளி 2022' - திரைப் பிரபலங்கள் பங்கேற்பு

Published on 17/10/2022 | Edited on 17/10/2022

 

Helping Souls' 'Ananda Diwali 2022' - Screen Celebrities Participate!

வரும் அக்டோபர் 24- ஆம் தேதி அன்று தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்கவும், பட்டாசுகளை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். 

 

அந்த வகையில், 'உதவும் உள்ளங்கள்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில்,  ‘ஆனந்த தீபாவளி' என்ற தலைப்பில் தொடர்ந்து, 25வது ஆண்டாக நிகழ்ச்சி ஒன்றிற்கு நேற்று (16/10/2022) காலை, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், நடிகைகள் தன்யா, வாணிபோஜன் மற்றும் நடிகர்கள் அஸ்வின், கருணாகரன் மற்றும் திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடினர். பின்னர், வாணிபோஜன் உள்ளிட்டோர் மேடையில் நடனமாடினர். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிருத்திகா உதயநிதி, "தீபாவளியைப் பசங்களுடன் கொண்டாடினோம். 18 ஆதரவற்ற இல்ல குழந்தைகளுடன் ஆனந்த தீபாவளியைக் கொண்டாடினோம். இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது முறையாகக் கலந்து கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். 

 

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் கருணாகரன், "தீபாவளி வாழ்த்துகள். உதவும் உள்ளங்கள் 25 ஆண்டாக தொடர்ந்து, ஆனந்த தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். நிறைய குழந்தைகளை ஒரே இடத்திற்கு அழைத்து வந்து, சந்தோஷமான தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இந்த உதவும் உள்ளங்களுக்கு, நம்மால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உதவ வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் (படங்கள்)

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

சென்னை பெருநகர காவல்  ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப இன்று (10-11-23) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகர்,  ரங்கநாதன் தெரு பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். 

Next Story

ஏழை சிறுவர்களுக்குப் புத்தாடை வாங்கிக் கொடுத்த சமூக ஆர்வலர்

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

 social activist who bought new clothes for poor childrens

 

வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசன். இவர் தன்னால் முடிந்த சமூக சேவைகளைச் செய்து வருகிறார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு ஆதரவற்றவர்கள், சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளுக்குப் புத்தாடைகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு, வேலூரில் நிரந்தர வீடு கூட இல்லாமல் வாசிக்கும் 11 நரிக்குறவர் குழந்தைகளை வேலூரில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு அழைத்து வந்தார்.

 

அவர்களிடம் உங்களுக்குப் பிடித்த உடைகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்ல, ஆச்சர்யமும், ஆனந்தமும் அடைந்த குழந்தைகள் தங்களுக்கான உடைகளை அவர்களே தேர்வு செய்து புதுவித அனுபவத்தைப் பெற்றனர். தங்கள் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் மகிழ்ச்சியை இவர்களும் ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் இதனைச் செய்து வருவதாக அன்பரசன் தெரிவித்தார்.