Advertisment

பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; கோவை மாநகரக் காவல் அதிரடி

nn

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனக்கோவை மாநகரக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

கோவையில் நிகழும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத்தடுப்பதற்காகவும் கோவை மாநகரக் காவல்துறை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 26 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவதோடு பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வர இருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் மோட்டார் வாகன விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்களுக்கு ஒரு வாரத்திற்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதற்கான விழிப்புணர்வு குறித்து பயிற்சி அளிக்கப்படும் எனவும் கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Advertisment

helmet police kovai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe