Published on 19/09/2018 | Edited on 19/09/2018

இருசக்கர வாகனத்தில் இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம். நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது. ஹெல்மெட் வழக்கில் தமிழக அரசு அளித்த பதில்மனு திருப்திகரமாக இல்லை, அரசின் நடவடிக்கைகளும் திருப்திகரமாக இல்லை, தேசியக்கொடியுடன்வரும் வாகனங்களுக்கும் காவல்துறையினர் உரிய மரியாதை அளிப்பதில்லை எனக்கூறியுள்ள நீதிமன்றம், இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற அரசாணையை ஏன் அமல்படுத்தவில்லை என்றும், 3 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி கேட்டுள்ளது.