Helium cylinder explosion accident in Trichy hill fort

திருச்சி மலைக்கோட்டை வாசலில் பலூனிற்கு காற்று நிரப்புவதற்காக இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். 22 பேர் காயம் அடைந்தனர்.

Advertisment

திருச்சியில் மலைக்கோட்டை வாசலில் பலூன் வியாபாரி ஹீலியம் சிலிண்டர் வைத்து பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்ததில் ரவிகுமார் என்பவர் உயிரிழந்தார். 13 வயதான ஜீவானந்தம் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

உயிரிழந்த ரவிக்குமார் என்பவர் ஹீலியம் சிலிண்டர் அருகே புகைபிடித்துக் கொண்டிருந்ததால் சிகெரெட்டின் தீப்பொறியால் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் சிலிண்டர் வெடித்த தாக்கத்தில் 21 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடித்த சிலிண்டர் அருகில் இருந்த ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியது. சுற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் உடைந்து சிதறியது. மேலும் அருகில் இருந்த நகைக்கடையின் கண்ணாடியும் உடைந்தது. தப்பிச் சென்ற பலூன் வியாபாரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.