/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_632.jpg)
பெங்களூருபகுதியைச் சேர்ந்தவர்ரத்னா ஜெயின் (50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் வைத்துள்ளார். இந்த நிலையில் பெண்ணையும்மாப்பிள்ளையையும்அழைத்துச் செல்ல பெங்களூரிலிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்துள்ளனர்.
இதன் காரணமாகத்திடீரென ஏலகிரி மலையில் டான் போஸ்கோ கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. இதனைக் காண அப்பகுதி மக்கள் கூட்டம் சேர்ந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திடமும் அல்லது மாவட்ட போலீசாரிடமும் முறையான அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கி இருந்தாலும், இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்எனக் கல்லூரியின் முதல்வர் போஸ்கோ அகஸ்டியனிடம் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும் கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகஅந்தப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாககாணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)