Advertisment

சில நொடிகளில் மறையும் ஹெலிகாப்டர்.... வெளியான அதிர்ச்சி வீடியோ

Helicopter disappears in a few seconds .... viral video released

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

Advertisment

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானப்படை ஹெலிகாப்டர் பனிமூட்டத்தில் மறையும் காட்சிகள் என ஒரு வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது மொபைல் ஃபோனில் படமெடுத்துள்ளனர்என்று கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சியில் வானில் பறந்து வரும் ஹெலிகாப்டர் சில நொடிகளில் மறைகிறது. தொடர்ந்து சிறிது நேரத்திலேயே பயங்கர சத்தம் வெளிப்படுகிறது. இந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

Advertisment

helicopter nilgiris
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe