Skip to main content

ஹெலிகாப்டர் விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த பலியானவர்களின் விவரம் வெளியீடு!

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

ljk

 

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே நிகழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலியான நிலையில் அவர்கள் தொடர்பான தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

 

வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்து மத கோயில்கள் ஏராளம் உள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் செல்ல தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் காலநிலை , கடுமையான மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் அங்கு செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இன்று கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி ஹெலிகாப்டரில் சென்றனர்.

 

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் பெயர் தொடர்பான விவரங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இறந்த மூவரின் தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தை சேர்ந்த சுஜாதா(56), பிரேம்குமார்(63), கலா(60) ஆகியோர் இந்த விபத்தில் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கோர விபத்து!

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Helicopter belonging to the Indian Navy crashes!

 

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படை தளம் அமைந்துள்ளது. இங்கு கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த கப்பல்கள் கடற்கரைக்கு சென்று ரோந்து பணியில் தினமும் ஈடுபடும். அது போல், ஹெலிகாப்டர்களும், தினமும் வானில் பறந்து அங்குள்ள பகுதிகளை சோதனையிட ரோந்து பணியில் ஈடுபடும். அந்த வகையில், இன்று (04-11-23) இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சேட்டாக்’ என்ற ஹெலிகாப்டர் ரோந்து பணியில் ஈடுபட தயாராக இருந்தது.

 

இந்த நிலையில், அந்த ஹெலிகாப்டரில் விமானியும் ,துணை விமானி மற்றும் அதிகாரி ஒருவர் என 3 பேர் பயணித்து புறப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் ஓடுதளத்தில் வேகமாக விழுந்து விபத்தில் சிக்கியது.  இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும்,  மற்ற 2 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், படுகாயமடைந்த அந்த 2 பேரை அருகில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட இருந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடந்த 1967ஆம் ஆண்டு முதல் சேட்டாக் ஹெலிகாப்டரை இந்திய கடற்படைக்கு பயன்படுத்தி வருகின்றனர். வரும் 2027ஆம் ஆண்டுக்குள் இந்த ஹெலிகாப்டர்கள் ஓய்வு எடுக்க உள்ள நிலையில், இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

Next Story

இராணுவ வீரர் பலியால் நிறுத்தப்பட்ட ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் சேவை

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

 Dhruv Helicopter Service stopped

 

இந்திய இராணுவத்தின் ஏ.எல்.எச். துருவ் எனும் ஹெலிகாப்டர் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம், மர்வா பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்தின்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் முதலில் தகவல் சொல்லப்பட்டது. அதேபோல், விபத்தில் சிக்கிய இராணுவ வீரர்கள் உடனடியாக மீட்கப்பட்டு இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பப்பல்லா அனில் எனும் இராணுவ வீரர் உயிரிழந்தார். 

 

மே 4ம் தேதி நடந்த இந்த விபத்தில் இராணுவ வீரர் உயிரிழந்ததை அடுத்து, இந்திய இராணுவத்தின் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் பயன்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.