ljk

Advertisment

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே நிகழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலியான நிலையில் அவர்கள் தொடர்பான தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்து மத கோயில்கள் ஏராளம் உள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் செல்ல தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் காலநிலை , கடுமையான மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் அங்கு செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இன்று கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி ஹெலிகாப்டரில் சென்றனர்.

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் பெயர் தொடர்பான விவரங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இறந்த மூவரின் தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தை சேர்ந்த சுஜாதா(56), பிரேம்குமார்(63), கலா(60) ஆகியோர் இந்த விபத்தில் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.