Advertisment

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! நான்கு பேர் பலி! 

Helicopter crash involves Brigadier General Pipin Rawat passes away

குன்னூர் அருகே, கோவையிலிருந்து வந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அதில், நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். (உயிரிழந்தவர்கள் பெயர் மற்றும் விவரம் இன்னும் வெளிவரவில்லை)

Advertisment

நீலகிரி மாவட்டம், குன்னூரில்வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது. இதனை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள ராணுவ மையத்திலிருந்து ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு ராணுவ அதிகாரி மற்றும் 3 வீரர்கள் வந்தனர்.

Advertisment

பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றும் மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ், ராணுவம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

helicopter wellington
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe