hjk

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே நிகழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்து மத கோயில்கள் ஏராளம் உள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் செல்ல தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் காலநிலை , கடுமையான மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் அங்குசெல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இன்று கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல உத்தரகாண்டின் பாதா பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

Advertisment

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விவரத்தை காவல்துறையினர் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.