Advertisment

ஹீலர் பாஸ்கர் கைது! சுகப்பிரசவம் குறித்த பயிற்சி முகாம் விவகாரம்!

hee

மருத்துவம் இல்லாமல் சுகப்பிரசவம் குறித்த பயிற்சி முகாம் தொடர்பாக விளம்பரம் அளித்த ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென கோவை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பானுமதி தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

மருத்துவ சிகிச்சைகள் இன்றி இயற்கை முறையில், குழந்தை பெறுவது தொடர்பான பயிற்சி முகாம் குறித்த விவகாரம் தொடர்பாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,கர்ப்பினி பெண்களுக்கு

Advertisment

மருத்துவமனையில் தான் பிரசவம் நடைபெற வேண்டும் என்றார். மகப்பேறு மரணங்கள் தமிழகத்தில் குறைந்திருப்பதாகவும்,பிரசவ கால மரணங்களை தடுக்க அரசு மருத்துவமனைகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.

கோவை புதூரை சேர்ந்த அமைப்பு ஒன்று வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக அவ்வமைப்பு நிர்வாகிஹீலர் பாஸ்கர் என்பவர் மீது மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும், காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும் கூறிய அவர்,

திருப்பூர் சம்பவம் போல் மற்றொரு சம்பவம் நடக்க கூடாது என்பதற்காகவே புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். புகாருக்குள்ளான பாஸ்கரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பானுமதி உறுதியளித்தார்.

பின்னர்,ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

child delivery kovai helar baskar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe