Advertisment

சென்னையில் வாகனங்கள் இயக்க கடும் கட்டுப்பாடு... -காவல்துறை எச்சரிக்கை  

 Heavy traffic-police alert in Chennai

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை மறுநாள் முதல் 30ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரின் சில பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைசெயலாளர்,சென்னை நகர காவல் எல்லையில் வாகன தணிக்கையைதீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில் சென்னை போக்குவரத்துக்கு காவல்துறை சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

Advertisment

அனுமதி சீட்டு இல்லாமல் சுற்றித் திரிபவர்கள் வாகனங்கள்பறிமுதல் செய்யப்படும். போலி இ-பாஸ்சீட்டுக்களை பயன்படுத்தி வாகனங்களை இயக்கினால் 144 பிரிவின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம் ஆட்டோ, டாக்ஸி உபயோக பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும். பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்லக்கூடாது. சென்னை காவல் எல்லைப் பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு மக்கள் வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூன் 21 முதல் 26ம் தேதி வரைஎவ்வித தளர்வும்இன்றி முழு முடக்கம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai corona virus police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe