தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் விட்டுவிட்டும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொதுவாகவே வாகன நெரிசலுடன் காணப்படும் கோயம்பேடு பகுதியில் மழையின் காரணமாக இன்று மாலை வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

மாலை நேரம் என்பதால், வேலை, கல்லூரி முடிந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கோயம்பேட்டில் பாலம் கட்டும் பணி இன்னும் முழுமையாக நிறைவடையாததாலும் கூட்ட நெரிசல் அதிகளவில் இருந்தது.

Advertisment