
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது சரக்கு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அதே நேரம் மழை பொழிந்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசலால் வெளியூரிலிருந்து சென்னை வருவோர்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Follow Us