
கடும் பனிமூட்டத்தால் உத்தரப்பிரதேசத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் விபத்துக்குள்ளாகி சிக்கின.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களில்15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் டெல்லி மீரட் அதிவேக சாலையில் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகி சாலையிலேயே நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Follow Us