Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று (06.04.2021) ஒரே கட்டமாக வாக்குப்பதிவானது காலை 7 மணியளவில் தொடங்கி இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில்,ராணிமேரி கல்லூரியில் வடசென்னை தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்குப் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.