Published on 28/06/2021 | Edited on 28/06/2021

ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் நேற்று (27.06.2021) அதிகாலை இரண்டு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் மத்திய அரசின் செளிப்ரேஷன் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு விமானங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் திருச்சிக்கு வருகை தருகின்றனர். எனவே விமான நிலையத்தின் உள்புறம், பயணிகளின் வருகை, பயணிகள் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.