தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.மதுரை கருப்பாயூரணி, அண்ணாநகர், மாட்டுத்தாவணி, தெப்பக்குளம், அனுப்பானடி, வண்டியூர், கோரிப்பாளையத்தில் மழை பெய்து வருகிறது.

Advertisment

 Heavy rains in various places in Tamilnadu

அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் மற்றும் லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. விருதுநகரில் ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், கிருஷ்ணன் கோவில் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Advertisment

 Heavy rains in various places in Tamilnadu

கோவை மாநகர் பகுதிகளான ராமநாதபுரம், காந்திபுரம், ஆர் எஸ் புரம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில்ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.