தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

 Heavy rains in Tambaram

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தாம்பரத்தில் பல பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தாம்பரம்,பல்லாவரம்,குரோம்பேட்டை, வண்டலூரில் கனமழை பெய்துவருகிறது.