வெப்பச்சலனம் காரணமாககடலூர், நாகை, காஞ்சிபுரம், திருவருர்ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aseaa.jpg)
தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் ஆட்சியர் அலுவகலகத்தில் 6 சென்டி மீட்டர் மழையும், புதுச்சேரியில் 4 சென்டிமீட்டர் மழையும், கேளம்பாக்கம்,மண்டபத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
Follow Us