தொடரும் கனமழை-வெளியான அறிவிப்பு

Heavy rains to continue - Announcement issued

இன்றும் நாளையும் என வரும் 12ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தேனி, கோவை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rainfall Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe