Published on 10/11/2021 | Edited on 10/11/2021

கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகைக்கான 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை மற்றும் மேகமூட்டத்தால் பார்வை முழுமையாக தெரியாத காரணத்தால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அத்துடன் ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் விமானங்களும், இங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கனமழை தொடரும் பட்சத்தில் மேலும் பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் கூறுகின்றன.