குமரிக்கடல் பகுதியில் நீண்ட நிலை கொண்ட வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. இதனால்வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisment

 Heavy rains in Chennai - 23 lakes filled in Tiruvallur

இந்நிலையில் தற்போது சென்னையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், நந்தனம், புருசைவாக்கம், அம்பத்தூர், பாடிஉள்ளிட்ட இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாகதிருவள்ளூரில் உள்ள 324 எரிகளில் 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. திருவள்ளூரில் 18 ஏரிகள் 70 சதவிகிதமும், 75 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.