/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI CORPORATION_0.jpg)
அடையாறு ஆற்றங்கரையோர மக்கள், வெள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்ல சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் உத்தரவில், ''தாழ்வான பகுதிகளான கானுநகர், சூளைப்பள்ளம், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாஃபர்கான் பேட்டை, கோட்டுர்புரம், சித்ரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறது. அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள 10, 11, 12, 13 ஆகிய மண்டலப் பகுதிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. சென்னையில் 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. உதவிக்கு 044- 25384530, 044- 25384540 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12.00 மணியளவில் திறக்கப்படவுள்ள நிலையில், ஏரியைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்குத் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us