தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழைபொழிந்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று (22.10.2021) கனமழை பொழியும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகதமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் என 12 மாவட்டங்களிலும் இன்று கனமழை பொழியும் என்றும், வரும் 25ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.