மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, பொள்ளாச்சி அடுத்த சர்கார்பதி பவர்ஹவுஸ் பகுதி மலைவாழ் மக்கள் குடியிருப்பில் உள்ள 15 குடிசைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் நாகூர் ஊத்து பகுதியில் உள்ள இரண்டு மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதில் காணாமல்போன ஒரு குழந்தையை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மற்ற மலைவாழ் மக்களை அங்குள்ள மின்வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.