தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரன் பேசுகையில்,
மேலடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாகடிசம்பர் 2 ஆம் தேதிவரை தமிழகத்தில் பரவலாக மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சூறாவளி காற்று வீசும் என்பதால் இந்த இரண்டு நாட்கள்மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம். சென்னையை பொறுத்தவரை நாளை மற்றும் நாளை மறுநாள் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை கீழணை,காட்டுமன்னார் கோவிலில்12 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளதுஎன்றார்.
இன்று பெய்துவரும்பலத்த மழை காரணமாக தமிழகத்தில் திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.