style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.