
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று இரவு சென்னையில்பல இடங்களில் காற்றுடன் மழை பெய்தது. சென்னை நங்கநல்லூர் பகுதியில் சாலை ஓரத்தில் மரம் சாய்ந்து மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்தது. இதனால், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் இருந்த மரம் சாய்ந்ததில் பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதில் மின் கம்பிகள் சேதமடைந்தது, உடனடியாக அங்கு வந்த மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)