Skip to main content

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை?

 

Heavy rain: In which districts will schools and colleges be closed tomorrow?


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சாமானிய மக்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 

இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை (13/11/2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (13/11/2021) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், கனமழையால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார், அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (13/11/2021) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !