nn

Advertisment

தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில், இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிவிப்பின்படி தமிழகத்தின் திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 9 மாவட்டங்களில் நாளைக்கு கன மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது