/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3547.jpg)
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் நேற்று இரவில் இருந்து விட்டுவிட்டு பரவலாக லேசான மழை பெய்துவருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை கடலோர பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் சூரைக்காற்று வீசும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us