Published on 28/08/2022 | Edited on 28/08/2022

தமிழகத்தில் 20 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சை, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.