தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்பொழுது சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல மீஞ்சூர், பழவேற்காடு, பெரியபாளையம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கன மழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.